புது வருடம்; புதிய நாம்
மற்றுமொரு அழகிய ஆண்டு தொடங்கியுள்ளது, ஆண்டு முழுவதும் எவ்வளோ போராட்டங்கள் இருந்தாலும் புதுவருடத்தை எப்பொழுதும் ஒரு உற்சாகத்தோடுதான் வரவேற்கிறோம். மாறுவது என்னவோ தேதி மட்டுமே ஆனால் புது ஆண்டு நமது வாழ்வை மாற்றும் என்று நாம் நம்புகிறோம். ஆனால் மாற்றம் என்பது நம்முள் இருப்பது. ஒவ்வொரு ஜனவரியிலும், நம்மில் பலர் புதிய வருட தீர்மானங்களில் தொடங்குகிறோம் — ஜிம் உறுப்பினர் சேர்க்கை, ஆரோக்கியமான உணவு, யோகா, அதிகாலையில் எழுதல் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும், அந்த தீர்மானங்களில் பெரும்பாலானவை சில வாரங்களுக்குள் மங்கிவிடுகின்றன. அது ஒரு நகைச்சுவை போலவே ஆகிவிட்டது. உண்மை என்னவென்றால் வாழ்நாள் பழக்கத்தை, தேதி மாறிவிட்டது என்பதற்காக, ஒரே இரவில் மாற்ற முடியாது. மாற்றம் நிச்சயமாக சாத்தியம் — ஆனால் அது படிப்படியாகத்தான் நடக்கும்; ஓர் இரவு அதிசயங்களால் அல்ல. நீங்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றால், முதலில் 30 நிமிடம் முன்னதாக எழத் தொடங்குங்கள். உடலைத் தகுதியாக்க வேண்டும் என்றால், தினமும் 30 நிமிட நடைப்பயிற்சியிலிருந்து தொடங்குங்கள். இரு வாரம் கழித்து அதை 45 நிமிடமாக உயர்த...