புரிந்துகொள்ள முடியா உறவுகள்

 கடந்த ரெண்டு மூணு பதிவ ஒரே கருத்துப்பேசி கொஞ்ச போர் அடிக்குது இன்னைக்கு ஒரு படத்தை பற்றி பேசுவோம்.

"நீ பொட்டு வச்ச...

தங்கக்குடம்...

ஊருக்கு நீ மகுடம்..."

இந்த பாட்டு கேட்ட திரு. விஜயகாந்த் அவர்களோடு சேர்த்து இப்ப லப்பர் பந்து படமும்தான் நியாபகத்துக்கு வருது. அந்த படத்துல பேச நிறைய விசயம் இருக்கு எனக்கு ஒரு காட்சி மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது, அந்த காட்சி பற்றிதான் இப்ப பேசப்போறோம்.

ஒருகட்டத்துல கெத்து மனைவி யசோதா கோவிச்சுகிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்டுவாங்க. அவங்க சின்ன வயசுலயே கெத்தை காதல் திருமணம் செய்திருப்பாங்க. படம் முழுக்க கெத்தை அவங்க திட்டும்போதெல்லாம் கெத்து அம்மா மகனுக்குத்தான் ஆதரவ பேசுவாங்க, கூடவே மருமகளை ஜாடை பேசவும் செய்வாங்க. வழக்கமான மாமியார் மருமகள் உறவு.

ஆனா அவங்க பிரிஞ்சு போனப்புறம் யசோதவை தேடி அவங்க மாமியார் அவங்க வீட்டுக்கு போவாங்க. பதினேழு வருஷம் தான் நான் என்னோட மகனை வளர்த்தேன், அதுக்கப்புறம் இருவத்திரண்டு வருசமா நீதான் அவன வளர்த்துன,ஏன் என்னையும் கூட நீதான் வளர்த்தது. ஒரு பொண்டாட்டி புருஷன் கிட்ட கோவிச்சுகிட்டு இருக்கலாம், ஆனா ஒரு அம்மா பிள்ளைங்க கிட்ட கோவிச்சுகிட்டு பிரிஞ்சுவரக்கூடாதுனு சொல்லுவாங்க. கூடவே நீயில்லாத வருத்தத்துல பசியே தெரியல, இப்ப உன்ன பார்த்ததும் பசிக்குது உன்கையால சோறு கொடுக்குறையானு  கேப்பாங்க. என்ன மாதிரியான உறவு இது?

கூட இருக்கும்போது வெளிப்படைய காட்டாத அன்பு, விலகிப்போனதும் அவங்கள மீறி வெளியில் வருது. அப்படின கூட அதை கொஞ்சம்கூட ஈகோ இல்லாம ஒத்துக்குறது ரொம்போ பெரிய விஷயம். இன்னைக்கு எவ்வளோ பலமான உறவும் ஈகோங்குற ஒரு விசயத்துல ஒடைஞ்சுபோய்டுது. அந்த படத்துல அவங்க வயசுக்கு அவங்க உறவுக்கு அவகிட்ட நான் என்ன போய் பேசுறதுனு அவங்க நினைச்சிருக்கலாம், ஆனா அப்படி இல்லாம தன்னோட ஈகோவவிட அந்த உறவு முக்கியமுனு புரிஞ்சுதான் மருமகளை தேடிபோனாங்க. இன்னைக்கு நம்மில் எத்தனை பேர் ஒரு உறவுக்காக ஈகோவை விட்டுக்கொடுத்திருக்கோம்? இல்ல ஈகோவினால் எத்தனை உறவுகளை இழந்திருக்கோம்? எல்லாருக்கும் இறங்கி போங்கனு சொல்லமாட்டேன், ஆனால் ஒரு உறவை ஒதுக்குவதற்கு முன் ஈகோ பெரியத இல்லை அந்த உறவு பெரியத என்று உங்கள் மனதோடு ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள்.

 

நம்மில் ஒரு குரல்-நமது வாழ்க்கை பயணத்தின் வழித்துணை.

 

Comments

Popular posts from this blog

நம்மில் ஒரு குரல்- A Voice Within Us

தோல்வியின் கதை-The Journey Through Failure

சேமிப்பது நல்லதல்ல-Savings is not good