புரிந்துகொள்ள முடியா உறவுகள்
கடந்த ரெண்டு மூணு பதிவ ஒரே கருத்துப்பேசி கொஞ்ச போர் அடிக்குது இன்னைக்கு ஒரு படத்தை பற்றி பேசுவோம். "நீ பொட்டு வச்ச... தங்கக்குடம்... ஊருக்கு நீ மகுடம்..." இந்த பாட்டு கேட்ட திரு. விஜயகாந்த் அவர்களோடு சேர்த்து இப்ப லப்பர் பந்து படமும்தான் நியாபகத்துக்கு வருது. அந்த படத்துல பேச நிறைய விசயம் இருக்கு எனக்கு ஒரு காட்சி மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது, அந்த காட்சி பற்றிதான் இப்ப பேசப்போறோம். ஒருகட்டத்துல கெத்து மனைவி யசோதா கோவிச்சுகிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்டுவாங்க. அவங்க சின்ன வயசுலயே கெத்தை காதல் திருமணம் செய்திருப்பாங்க. படம் முழுக்க கெத்தை அவங்க திட்டும்போதெல்லாம் கெத்து அம்மா மகனுக்குத்தான் ஆதரவ பேசுவாங்க, கூடவே மருமகளை ஜாடை பேசவும் செய்வாங்க. வழக்கமான மாமியார் மருமகள் உறவு. ஆனா அவங்க பிரிஞ்சு போனப்புறம் யசோதவை தேடி அவங்க மாமியார் அவங்க வீட்டுக்கு போவாங்க. பதினேழு வருஷம் தான் நான் என்னோட மகனை வளர்த்தேன், அதுக்கப்புறம் இருவத்திரண்டு வருசமா நீதான் அவன வளர்த்துன,ஏன் என்னையும் கூட நீதான் வளர்த்தது. ஒரு பொண்டாட்டி புருஷன் கிட்ட கோவிச்சுகிட்டு இருக்கலாம், ஆனா ஒரு...